
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நதிநீர் பிரச்சனை குறித்த மோதல் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கு இடையே இருந்து வருகிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அன்று முதல் இன்று வரை மேகதாது விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அன்று முதல் இன்று வரை மேகதாது விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியது. மேலும், இதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து உள்ளது. கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவெற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த நிலையில் தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.