அதிமுகவுக்கு யாருமே நெருக்கடி தர முடியாது; சொல்கிறார் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா!

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அதிமுகவுக்கு யாருமே நெருக்கடி தர முடியாது; சொல்கிறார் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா!

சுருக்கம்

Nobody can crack the AIADMK - MLA Rajan Chellappa

சசிகலாவை நீக்கியதில் எனக்கு விருப்பம் இல்லை என்பதைவிட அதை தவிர்க்கலாம் என்பதால் ஒப்புக்கொண்டேன் என்று, அதிமுகவுக்கு யாரும் நெருக்கடி தர முடியாது என்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எத்தனை நாள் பதவியில் இருக்கிறோம் என்பதைவிட என்ன செய்தோம் என்பதே முக்கியம்.

சசிகலாவை நீக்கியதில் எனக்கு விருப்பம் இல்லை என்பதைவிட அதைத் தவிர்க்கலாம் என்பதால்தான் ஒப்புக்கொண்டேன்.

18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் உண்டு. இருந்தாலும் சபாநாயகர் சட்ட விதிகளைப் பின்பற்றியிருக்கிறார். அவர்களை நீக்கியதற்கு பதில் இடைநீக்கம் செய்திருக்கலாம்.

ஸ்லீப்பர் செல் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. நான் சுதந்திரமாக முடிவெடுப்பேன். என் முடிவு அம்மா ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும்.

டிடிவி தினகரனை இணைப்பதற்கான காலம் இன்றைக்கு வரவில்லை. அப்படி ஒரு சூழல் வரும்போது என்னைப்போன்றோர் இணைக்க முன் நிற்போம். 

அழகிரி மட்டுமல்ல யாருமே அதிமுகவுக்கு நெருக்கடி தர முடியாது. திமுகவில் பிளவை ஏற்படுத்த அப்படி ஒரு கருத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கலாம்.
என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?