அவையில் எச்சரிக்கை எல்லாம் விடுக்கக்கூடாது மிஸ்டர் …. வைகோவை எச்சரித்த வெங்கையா நாயுடு !!

By Selvanayagam PFirst Published Jul 27, 2019, 8:59 AM IST
Highlights

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழநாட்டில் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முயன்றால் அதைத தடுத்து நிறுத்துவோம் என்றும் மத்திய அரசு, தன் முடிவை கைவிடவேண்டும்; மீறினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என, எச்சரிக்கிறேன் என தெரிவித்தால் அதிர்ச்சி அடைந்த குடியரசுத் துணைத் தலைவர் இது போன்று எச்சரிக்கை விடுக்கக் கூடாது என வைகோவை எச்சரித்தார்.
 

ஜீரோ ஹவர் நேரத்தில் பேசுவோர், மூன்று நிமிடங்களுக்குள், தங்களது பேச்சை முடிக்க வேண்டும். அதன் பிறகு மைக் 'ஆப்' ஆகிவிடும் என்பதால், எம்.பி.,க்கள் சுருக்கமாக பேசுவர். 

அண்மையில் மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வாகி உள்ள, ம.தி.மு.க.,வின் வைகோ, ஏற்கனவே பார்லிமென்ட் அனுபவம் உள்ளவர் என்பதால், தன் கன்னி உரையை இந்த காலக்கெடுவுக்குள் முடிக்க முயன்றார். 

அவர் பேசும்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால், காவிரி டெல்டா நிலங்கள் பாழாகும். இந்த அழிவு திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

என்ன வந்தாலும் சரி; திட்டங்களை நிறைவேற்று வோம் என,ஆணவமாக கூறியுள்ளார்.இத் திட்டங்கள் மூலம், மத்திய அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கலாம். ஆனால், காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகி விடும்; வருங்கால தலைமுறையினர், உணவுக்கு தட்டேந்தி நிற்குமளவுக்கு, எத்தியோப்பியா போல மாறிவிடும்.எனவே, மத்திய அரசு, தன் முடிவை கைவிடவேண்டும்; மீறினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என பேசினார்.

வைகோவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாநிலங்களவைத் தலைவர்  வெங்கையா நாயுடு சபைக்குள் எச்சரிக்கை எல்லாம் விடுக்க முடியாது, மிஸ்டர் வைகோ. நீங்கள் குறிப்பிட விரும்பும் கருத்தை தெரிவித்து விட்டீர்கள். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை என் பரிந்துரையாகவோ அல்லது வேண்டு கோளாகவோ எடுத்துக் கொள்ளுங்கள் என எச்சரித்தார்.

click me!