பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆன்மீக பேச்சாளர் நெல்லை கண்ணன் ஏற்கனவே பேசுவதற்காக ஒத்துக் கொண்ட கோவில் நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்பட மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
undefined
மேலும் இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களிலும், டெல்லியிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்தற்கு எதிராக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஆன்மீக பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசியாதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட போது, இனிமேல் இந்துக்கள் அவரை ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு அழைக்க வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் கலந்து கொள்வதற்காக அவருக்கு முன் பணம் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அவரது நிகழ்ச்சியை விழாக்குழுவினர் ரத்து செய்துள்ளனர்.