பாஜகவை ஜெயிக்க ஒரு வழிதான் இருக்கு..3வது அணிக்கு வாய்ப்பில்ல ராஜா.. பி.கே சொன்ன மாஸ்டர் பிளான் !

By Raghupati RFirst Published May 1, 2022, 10:51 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்ற தகவல்கள் வெளியான.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய மறுத்துவிட்டார்.

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக நிபுணராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர்.   இவர்தான் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது அணியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவெடுக்க இருப்பதாகவும் அதற்கு பிரசாந்த் கிஷோர் உதவுவதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்த கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் அண்மையில் அளித்த பேட்டியில், ‘நமது நாட்டில் எந்த ஒரு மூன்றாம் அணியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. பாஜகவை தோற்கடிக்க விரும்பும் எந்தவொரு கட்சியும், இரண்டாவது முன்னணிக் கட்சியாக உருவாக வேண்டும். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் அது இரண்டாவது அணியாக இல்லை.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையும் நானும் பல விஷயங்களை ஒப்புக்கொண்டோம். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியும்  அவர்களிடம் பல பெரிய தலைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு நான் தேவையில்லை. நான் கட்சியில் எந்தப் பங்கையும் விரும்பவில்லை, எதிர்காலத்திற்கான ஒரு வரைபடத்தை ஒப்புக்கொண்டவுடன், அது செயல்படுத்தப்பட வேண்டும். அதையே நான் விரும்பினேன். காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு, அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவே பொறுப்பு.

அவர்கள் என்னை அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக வேண்டும் என்று விரும்பினர்.ஆனால், அந்த குழுவில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன.  2014க்குப் பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்காலத்தை பற்றி, அதன் கட்டமைக்கப்பட்ட விதத்தில் விவாதித்துள்ளது. இது மிகவும் ஆழமாக வேரூன்றிய கட்சி. எதிர்காலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பில்லை என்று கூறுவது தவறாக அமையும், ஆனால், அவர்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். 2024ல் பிரதமர் மோடிக்கு யார் சவால் விடுவார்கள் என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : முஸ்லீம் கடையில் டீ குடிக்காதீங்க.. ஆண்மைக்குறைவு ஏற்படும் - சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ !!

இதையும் படிங்க : ஷாக்கான ஸ்டாலின்..! அதிர்ந்த அதிகாரிகள்..! ஆண்டிப்பட்டியில் நடந்த நள்ளிரவு சம்பவம் - வீடியோ

click me!