இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தா தமிழ்தாய் வாழ்த்தே இருக்காது… தைரியமாக கமெண்ட்  அடிக்கும் ஆர்ஜுன் சம்பத் !!

First Published Jan 25, 2018, 9:35 AM IST
Highlights
No tamil prayer song.told Arjun sampath


நீராருங் கடலுடுத்த என்ற பாடல் தமிழ்தாய் வாழ்த்தே கிடையாது என்றும், இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தே இருக்காது என்றும் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில்  பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் – சமஸ்கிருதம் அகராதி என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற  காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். அதே விழாவில்  தேசிய கீதம் இசைக்கப்படும் போது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

இதுகுறித்து, பல்வேறு தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காததற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுக்காத விஜயேந்திரரை சட்டப்படி கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சங்கரமடம், தமிழ்த்தாய் வாழ்த்தும் கடவுள் வாழ்த்து என்பதால் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்ததாகவும், தேசிய கீதம் பாடுவது நாட்டுக்கு மரியாதை செலுத்தப்படுவது என்பதால் அப்போது அவர் எழுந்து நின்றதாகவும் காஞ்சி சங்கரமடம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அர்ஜுன் சம்பத், நீராருங் கடலுடுத்த என்ற பாடல் தமிழ்தாய் வாழ்த்தே அல்ல என்றும், இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்தாய் வாழ்த்து என்ற சிஸ்டத்தையே எடுத்துவிடுவோம் என்று தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தபோது, தமிழ் தாய் வாழ்த்தை எழுதியது யார் என்ற கேள்வி வந்தபோது, தமிழ்தாள் வாழ்த்தை கிண்டல் அடிக்கும் விதமாக அமைந்ததது என்றும், தமிழர்கள் தெய்வமாக மதிக்கும் தமிழ்தாள் வாழ்த்தை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும் கமல் உட்பட 14 பேரை து செய்ய வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

click me!