Vijay Makkal Iyakkam: திமுகவுக்கு ஆதரவில்லை.. விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி.. புஸ்ஸி ஆனந்த் அதிரடி..!

Published : Feb 08, 2022, 10:24 AM ISTUpdated : Feb 08, 2022, 10:31 AM IST
Vijay Makkal Iyakkam: திமுகவுக்கு ஆதரவில்லை.. விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி.. புஸ்ஸி ஆனந்த் அதிரடி..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் "தளபதி" விஜயின்  உத்தரவின் படி  “தளபதி விஜய் மக்கள் இயக்கம்" எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லாமல் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றியை பெற வேண்டும் என தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்ற விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவுக்கு தூத்துக்கடி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆதரவு தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவற்றிற்கு ஒரே அறிக்கையின் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இதுதொடர்பாக விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டும் அறிக்கையில்;- தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் "தளபதி" விஜயின்  உத்தரவின் படி  “தளபதி விஜய் மக்கள் இயக்கம்" எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.

எனவே  விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைகளும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, "தளபதி" மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!