அரசியல் மற்றும் மதத் தலைவர்களுக்கு சிலை வைக்காதீங்க !! நல்ல பள்ளிகளைத் திறங்கள் !! பிரதமருக்கு ரகுராம் ராஜன் அட்வைஸ் !!

By Selvanayagam PFirst Published Dec 10, 2019, 7:48 AM IST
Highlights

தேசிய அல்லது மதத் தலைவர்களுக்குப் பிரமாண்டமான சிலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகளின் மனத்தைத் திறக்கும் நவீன பள்ளிகளையும் பல்கலைக் கழகங்களையும் கட்டியெழுப்ப வேண்டும் என  ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி, இரண்டாவது காலாண்டில் 4.5 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. நிதியாண்டின் முடிவிலும்,இது 5 சதவிகிதத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்நிலையில் பொருளாதார மந்தநிலைக்கான காரணம் குறித்தும், அதை மீட்பதற்கானசில வழிகளைப் பற்றியும், ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ‘கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில்:பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, என்ன தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் தற்போதைய அரசாங்கத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மையிலிருந்து தொடங்க வேண்டும். 

மத்திய அமைச்சர்களுக்கு போதுமான அதிகாரம் அளிக்காமல் பிரதமர் அலுவலகத்தில் மட்டும்அதிகாரங்கள் குவிக்கப்படுவது நல்லதல்ல.பிரதமரைச் சுற்றியுள்ளவர்கள் மட்டுமே திட்டமிடுதல், முடிவெடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது, அரசியல் கட்சிகளை நிர்வகிப்பதற்கு உகந்ததாக இருக்கலாமே தவிர, அதன் மூலம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

முதலில் இந்தப்பிரச்சனை என்பது தற்காலிகமானது என்று நம்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஒருபக்கம் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் மக்களுக்கான தேவை நிறைவடைவது குறைந்து வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் ஆழ்ந்தசிக்கலில் இருக்கின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் சிக்கலில் இருக்கின் றன. இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகிறது. இது அவர்களிடையே ஓர் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உள் நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் இல்லை என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

தேசிய அல்லது மதத் தலைவர்களுக்குப் பிரமாண்டமான சிலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகளின் மனத்தைத் திறக்கும் நவீன பள்ளிகளையும் பல்கலைக் கழகங்களையும் கட்டியெழுப்ப வேண்டும் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

click me!