திமுகவில் மரியாதை இல்லை... பதவி வேண்டுமா? இங்கே வாங்க... திருமாவளவனுக்கு பாஜக அழைப்பு..!

Published : Jul 31, 2021, 10:22 AM IST
திமுகவில் மரியாதை இல்லை... பதவி வேண்டுமா? இங்கே வாங்க... திருமாவளவனுக்கு பாஜக அழைப்பு..!

சுருக்கம்

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது அணுகுமுறை பல சிறுபான்மை மக்களையும் ஈர்த்தது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவனும் பாஜகவை ஆதரிப்பார் என பா.ஜ.க.,வின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

வேலூரைச் சேர்ந்தவர் இப்ராஹிம். தொடர்ந்து பாஜகவிற்காக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து அவருக்கு பாஜக, சிறுபான்மை தேசிய செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது அணுகுமுறை பல சிறுபான்மை மக்களையும் ஈர்த்தது. 

இந்நிலையில், சேலத்தில் பேசிய அவர், ’’தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க., வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம். பா.ஜ.க., இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.க., - திருமாவளவன் உள்ளிட்டோர் துாண்டிவிட்டு, பகைமை பாராட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர்.

இதை உடைக்க, கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை சந்தித்து, பா.ஜ.க., சாதனை குறித்து விளக்குவோம். பா.ஜ.க.,வினர், இஸ்லாமியர் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், தி.மு.க., ஆட்சியும், போலீசாரும் தடுக்கின்றனர். திருமாவளவன் கட்சிக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. பா.ஜ.க,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.க.,வை ஆதரிப்பார்’’எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!