BREAKING சசிகலா வெளியே வந்தாலும், அதிமுகவில் இணைய 100% வாய்ப்பு இல்லை.. முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்..!

Published : Jan 19, 2021, 01:14 PM IST
BREAKING சசிகலா வெளியே வந்தாலும், அதிமுகவில் இணைய 100% வாய்ப்பு இல்லை.. முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்..!

சுருக்கம்

ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. சசிகலாவுடன் இருந்த பெரும்பாலானோர் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர். சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலாளர்கள் ஆகியோரும் சென்றனர். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை பிரதமர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்தார். தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான முதல்வரின் சந்திப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முடிவுற்ற பணிகளை தொடங்கிட, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட அழைத்தேன். மேலும், காவிரி குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் அழைப்பு விடுத்தேன். நிவர், புரெவி புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மீனவர்களால் சிறை வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கும். சேதமடைந்த பயிர்களுக்கு நிாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறதியளித்துள்ளார். தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என நம்புகிறேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. 

மேலும், பேசிய முதல்வர் சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100 வாய்ப்பில்லை என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. சசிகலாவுடன் இருந்த பெரும்பாலானோர் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர். சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!