
தமிழக அமைச்சர்கள், தங்கள் துறை மூலம் ஏகப்பட்ட முறைகேடுகளை நிகழ்த்தி, ஏகப்பட்ட சொத்துக்களைக் குவித்து இருப்பதாக, மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தகவல்களைத் திரட்டி, மேலதிகாரிகளுக்கு அனுப்பி, அது, மத்திய அரசின் மேல்மட்ட கவனத்துக்குச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல், தமிழக அமைச்சர்களிடம் நட்புணர்வுடன் இருக்கும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலர் லீக் எண்ணியதாகவும், அது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அமைச்சர்களை அழைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான சிலர், இனிமேல், துறை ரீதியிலான எந்தத் தகவல்களையும் போனில் பேச வேண்டாம் என்றும், குறிப்பாக, டெண்டர் விவகாரங்கள் குறித்து யாரிடமும் போனில் பேச வேண்டாம்' எனவும் , கண்டிப்பாக கூறிவிட்டதாகவும் தகவ்லகள் வெளியாயுள்ளன.
இதனால், பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொந்த செல்போனை, கடந்த ஒருவார காலமாக ஆப் பண்ணி வைத்துவிட்டனர். யாரிடமாவது பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் . உதவியாளர்கள் அல்லது , கட்சிக்காரர்களின் போனை வாங்கி பேசுகின்றனர்.