என்னைப் போல் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முடியுமா ? முதலமைச்சர் எடப்பாடிக்கு ஆ.ராசா சவால் !!

By Selvanayagam PFirst Published Oct 22, 2018, 7:02 PM IST
Highlights

2ஜி பிரச்சனையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை நான் எதிர் கொண்டது போல் நெடுஞ்சாலைத் துறை ஊழல் பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முடியுமா என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

2 ஜி ஊழல் குற்றச்சாட்டு  எழுந்தபோது மத்திண அமைச்சராக இருந்து ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிபிஐ தொடர்ந்த வழக்கை எதிர்கொண்டார். பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் 4 800 கோடிரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் திமுக சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்றநிலையில் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, உலக வங்கியிடம் கடன் பெற்று சாலை அமைக்கும் பணி முதலமைச்சரின்  உறவினருக்கு தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்  நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்துள்ளதாக கூறிய அவர், அதற்கான ஆதாரங்களை திமுக சீதிமன்றத்தில் கொடுத்துள்ளதாக கூறினார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறினார். 

2ஜி பிரச்சனையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை நான் எதிர் கொண்டது போல் நெடுஞ்சாலைத் துறை ஊழல் பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ராஜினாமா செய்து விட்டு வழக்கை எதிர்கொள்ள முடியுமா என ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

 

 

click me!