ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய அரசு திட்டமா? தெளிவாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!

By vinoth kumarFirst Published Sep 7, 2021, 5:11 PM IST
Highlights

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பரிசீலித்து வருவதாக செய்தித்தாள்களில் படித்தேன். அப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுக்கக்கூடாது. தமிழக அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்க நேர்ந்தால் சில நேரங்களில் ஆண்கள் ஆர்டர் செய்து விட்டு வெளியே செல்லக்கூடிய சூழல் வரலாம்.

ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி;- டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பரிசீலித்து வருவதாக செய்தித்தாள்களில் படித்தேன். அப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுக்கக்கூடாது. தமிழக அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்க நேர்ந்தால் சில நேரங்களில் ஆண்கள் ஆர்டர் செய்து விட்டு வெளியே செல்லக்கூடிய சூழல் வரலாம். அப்போது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் அதை வாங்கி வைக்க வேண்டிய நிலை வரும், அதனால் அக்கம் பக்கத்து வீட்டார் அவர்களை தவறாக எண்ணக் கூடிய நிலை உருவாகும். எனவே சமூகத்தில் இது மாதிரியான குழப்ப நிலைகளை தவிர்க்க இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.மேலும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை பணியாளர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். 

இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக 15 கோடி ரூபாய் செலவாகும். இதன் மூலம் 25,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!