கவர்னர் முதல் காவலர் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை.. முதல்வரை சீண்டும் இபிஎஸ் !!

By vinoth kumarFirst Published Apr 23, 2022, 11:53 AM IST
Highlights

நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது.

கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கோவில் திருவிழா

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டதை காவல் துறையினர் அகற்ற முயன்றனர்.  இதனால், ஆறுமுகம் என்பவர் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பெண் எஸ்.ஐ.க்கு கத்தி குத்து

இதனால், ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை கழுத்தில் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் போதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறி ஆறுமுகம் என்பவர் மீது உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசா ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததால் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது என  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

 சீர்கெட்டு போன தமிழ்நாடு

இதுதொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது.

நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா,
அபராதம் விதித்ததற்காக
கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும்,1/2

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

 

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!