மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்.. மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

Published : Sep 13, 2020, 11:55 AM IST
மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்.. மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

சுருக்கம்

நீட் தேர்வு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்தியை கேட்கும்போது வேதனையாக இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் ஆகியோர் ஒரேநாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில்;- நீட் தேர்வு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

 மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள். நீட் தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுங்கள் என்று கூறியள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!