தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்வதை யாராலும் தடுக்க முடியாது.. திமுக கூட்டணி கட்சி தலைவர் அதிரடி.!

Published : Oct 15, 2021, 06:19 PM IST
தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்வதை யாராலும் தடுக்க முடியாது.. திமுக கூட்டணி கட்சி தலைவர் அதிரடி.!

சுருக்கம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் . அதிமுகவிற்கு வலுவான தலைமை அமையவில்லை. பாஜகவைச் சார்ந்து இருக்கும் வரை அதன் சரிவு தொடரும்.சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. 

அதிமுகவிற்கு வலுவான தலைமை அமையவில்லை. பாஜகவை சார்ந்து இருக்கும் வரை அதன் சரிவு தொடரும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்;- ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதில்  விடுதலை சிறுத்தை கட்சி 43 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 4 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது. அதில் 27 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் 3 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அனைத்து தரப்பு மக்களும் விடுதலை சிறுத்தை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் . அதிமுகவிற்கு வலுவான தலைமை அமையவில்லை. பாஜகவைச் சார்ந்து இருக்கும் வரை அதன் சரிவு தொடரும்.சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்வதை யாரும் தடுக்க முடியாது. 

மேலும், தஞ்சை கும்பகோணம் அருகே பிரபாகரன் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக கெளரவ கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்து வருகிறது. வட மாநிலத்தை விட தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைகள் குறைவாக இருக்கும். ஆனால், தற்போது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!