ஜெயலலிதா மட்டும்தான் அம்மா.. சசிகலா எல்லாம் சும்மா… விளாசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

By manimegalai aFirst Published Oct 15, 2021, 5:29 PM IST
Highlights

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வதால் எந்த பலனும் ஏற்படாது. அவரால் அதிமுக-வில் எந்த பிளவையும் ஏற்படுத்த முடியாது.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வதால் எந்த பலனும் ஏற்படாது. அவரால் அதிமுக-வில் எந்த பிளவையும் ஏற்படுத்த முடியாது.

50-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாட தயாராகிவரும் அதிமுக தலைமைக்கு சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வுகள் பெரும் குடைச்சலாய் உள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை ராயபுரத்தில்  தனியார் திருமண மண்டபத்தில், தெற்கு, கிழக்கு மற்றும் வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்கள் சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:

எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 பேரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி. அதனால் கட்சியில் எந்தவித பிளவும் ஏற்படாது. அம்மா என்றால் ஜெயலலிதா மட்டுமே, சசிகலா எல்லாம் சும்மா என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

அம்மா என்ற வார்த்தையையோ, அதிமுக-வின் கொடியையோ சசிகலா பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் இதற்காக போராட்டம் நடத்தி சசிகலாவை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை. அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர். எந்த தீயசக்தியாலும் அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றிருந்தால் வெற்றி, தோல்வி சரி சமமாக இருதிருக்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

click me!