புதுக்கட்சியெல்லாம் இல்லை !! வாயை மூடிட்டு சும்மா இருங்க…ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அழகிரி !!

Published : Sep 14, 2018, 07:45 AM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
புதுக்கட்சியெல்லாம் இல்லை !! வாயை மூடிட்டு சும்மா இருங்க…ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அழகிரி !!

சுருக்கம்

புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக வெளியான தகவலை மறுத்துள்ள மு.க.அழகிரி தான் கூறும் வரை எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும், விளக்கம் அளித்து அழகிரி, தனது ஆதரவாளர்களுக்கு வாய் பூட்டு போட்டுள்ளார்.

கடந்த 2104 ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த  திமுக தலைவரின் மூத்த மகனுமான அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து பல முறை கட்சியில் சேர அவர் முயற்சி செய்தும் முடியாமல்  போனது. இந்நிலையில்தான் கடந்த மாதம் 7 ஆம் தேதி கருணாநிதி உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக மரணமடைந்தார். அவர் இறந்த மூன்றாவது நாளே தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் உள்ளனர் என அழகிரி கொளுத்திப்போட்டார்.

தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் கட்சியில் சேர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி பொதுக்குழுவின் ஆதரவுடன் ஸ்டாலின் திமுக தலைவரானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரி திமுகவுக்கு எதிராக கடந்த  5 ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்தினார். மேலும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட அழகிரி முயற்சி செய்து வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் மு.க.அழகிரி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக வெளியான தகவலை மறுத்துள்ள அவர் தான் கூறும் வரை எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என விளக்கம்  தனது ஆதரவாளர்களுக்கு வாய் பூட்டு போட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!
Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!