
நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருக்கிறேன் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போலோ மருத்துவமனையில் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதற்கு பதில் அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்,ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அப்போலோ மருத்துவ மனையில் இல்லை என பதில் அளித்து விட்டது.
இது குறித்து பல்வேறு மருத்துவர்களிடன் கருத்து கேட்டு உள்ளது பிரபல நாளிதழ்...!
டிஎன்ஏ சோதனைக்கு வேறு என்ன மாற்று வழிகள் உள்ளது என கேட்ட கேள்விக்கு, சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் தடவியல் துறை தலைவர் சம்பத் குமார் தெரிவிக்கும் போது...
"இவ்வளவு பெரிய விஐபி பேஷன்ட் என்பதால், நிச்சயம் அவரது ரத்த மாதிரிகள் இருக்கும். அதனை அப்போலோ நிர்வாகம் தர மறுப்பதால், ஜெயலலிதா பயன்படுத்திய வாட்ச், கண்ணாடி, முடி கிடைத்தால் கூட அதன் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியும் என என கூறுகிறார்.
ஆனால் அதெல்லாம் அவருடையது தானா என்ற கேள்வி எழுப்பி அது வேறு பக்கம் திரும்பி விடும்.
மேலும், இதையும் தாண்டி கடைசியாக ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என ஆப்ஷன் தேர்வு செய்தால் கூட, அப்படி எல்லாம் செய்யாமலே, ஒரு சிறு துளையிட்டு அவரது உடலிலிருந்து சிறு துணுக்கு கிடைத்தாலும் டிஎன்ஏ சோதனை செய்து விட முடியும் என்றுள்ளார்
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற விட்டாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அப்போலோவிற்கு தெளிவாக தெரிந்துள்ளது என கூறுகிறார் மருத்துவர்.
ஆக மொத்தத்தில் அபோலோ மருத்துவமனியில் இருந்து ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இல்லை என்றால் பரவாயில்லை, ஜெயலலிதா பயன்படுத்திய கண்ணாடி, வாட்ச் கூடாவா இருக்காது என கேள்வி எழுந்துள்ளது