உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையா ? கவலைப்படாதீங்க இனி தேவையில்லை ….முடிவுக்கு வந்த ஆதார் சிக்கல் !!

By Selvanayagam PFirst Published Oct 19, 2018, 7:19 AM IST
Highlights

மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையெனில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் என வெளியான செய்திக்கு ஆதார் ஆணையமும்,தொலை தொடர்பு துறையும்  மறுப்பும் தெரிவித்துள்ளது.
 

மத்திய மாநில அரசுகளின்  திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது.

வங்கிக் கணக்குகள் துவங்க, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. . அதே போல் சிம் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் ஆதார் அட்டை அடிப்படையில் வழங்கப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைதொடர்பு துறை மற்றும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (ஆதார்) இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,  50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பு ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தி தவறு. கற்பனையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியானது. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!