அய்யப்பன் கோவில் ஆதிவாசிகளுக்குச் சொந்தமானது… பகீர் கிளப்பும் பினராயி விஜயன் !!

By Selvanayagam PFirst Published Oct 18, 2018, 11:35 PM IST
Highlights

சபரிமலை அய்யப்பன் கோவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமானது என்றும், அதில்  ஆதிக்க சக்திகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயலுகின்றன எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் ஆண்கள் மற்றும் 10 வயதுக்கு கீழும் 50 வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் மட்டுமே நுழைய முடியும். இந்நிலையில் 10 வயது  முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழையலாம் என உச்சநிதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், பல இளம் பெண்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் பக்தர்கள் சிலர் தடுத்தனர்.

இதையடுத்து அங்கு போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இந்நிலையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் போராட்டத்தை தூண்டிவிடுவதாக அம்மாநில  அமைச்சர் ஷைலஜா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஆதிவாசி சமூகத்துக்கு சொந்தமான சபரிமலையில் ஆதிக்க சக்திகள் ஆதிக்கம் செலுத்த முயலுகின்றன என்றும், பிற்படுத்தப்பட்டவர்களை அந்த கோயிலக்குள் வரவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது என கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக  கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘சபரிமலை தனித்துவம் மிக்க கோயில். அனைத்த மத நம்பிக்கை கொண்டவர்களும் அந்த கோயிலுக்கு செல்ல முடியும். இதனை ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவார் இயக்கங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சபரிமலையின் இந்த தனித்துவத்தை அழிக்க பலமுறை அவர்கள் முயன்றனர்.

சபரிமலை கோயிலின் பூஜை மற்றும் சம்பிரதாயம் மலையரன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும். இந்த நம்பிக்கை கொண்டவர்களை தாக்குவது தான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் திட்டம். இதன் மூலம் அவர்கள் வன்முறையை பரப்ப முடிவு செய்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்..

சபரிமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜாதி மற்றும் ஆதிக்க சிந்தனை கொண்டவர்கள். சபரிமலையில் இருந்து பிற்படுத்தப்பட்டவர்களை அகற்ற வேண்டும் என்பதே இவர்களில் நோக்கம். இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தை அனைத்து நம்பிக்கை கொண்ட மக்களும் கண்டிக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!