சென்னையில் இனி எவ்வளவு மழை பெய்தாலும் கவலை இல்லை..!! வெறும் 2 மணி நேரம் போதும். அதிகாரிகள் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2020, 11:22 AM IST
Highlights

சர்வதேச அளவில் 6 சென்டி மீட்டர் க்கு மேல் கன மழை பெய்யும் போது குறைந்தது 2 மணி நேரம் நின்று செல்லும். ஆனால் தற்போது பெய்த மழையால் இரண்டு மணி நேரத்திற்குள் மழை நீர் அகற்றப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் விடிய விடிய கன மழை பெய்தும்  வெறும் 2 மணி நேரத்திற்குள் மழை நீர் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  

சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் இது குறித்தி தெரிவித்துள்ள சென்னை  மாநகராட்சி அதிகாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 851 இடங்களில் பருவ மழை காலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. 2017 ஆம் ஆண்டு 306 இடங்களில் பருவ மழைபெருநகர சென்னை மாநகராட்சியில்  காலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் மண்டலம் 7,11 மற்றும் 12 இல் உலக வங்கி மூலமாக ரூ.1200 கோடி நிதி உதவி பெற்று 406 கிலோ மீட்டர் நீளம் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. 

 

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் விடுபட்ட, தூர்ந்து போன  மழை நீர் வடிகால் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு  412 இடங்களில் கட்டப்பட்டுள்ளது. தற்போது  பெய்த மழையில் 3-ல் இருந்து 10  இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சர்வதேச அளவில் 6 சென்டி மீட்டர் க்கு மேல் கன மழை பெய்யும் போது குறைந்தது 2 மணி நேரம் நின்று செல்லும். ஆனால் தற்போது பெய்த மழையால் இரண்டு மணி நேரத்திற்குள் மழை நீர் அகற்றப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

click me!