முதலமைச்சர், அமைச்சர்களிடம் எத்தனை முறை சொல்லியும் பலன் இல்லை.. விவசாயிகளுக்காக அதிமுகவை எச்சரித்த அன்சாரி..

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2021, 6:10 PM IST
Highlights

இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு , 35 % இழப்பீடு வழங்க கோப்புகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல்வர் நாகைக்கு வந்தப்போது, அவரிடம் நானும், இச்சங்கத்தினரும் நேரில் வலியுறுத்தினோம்.மாண்புமிகு அமைச்சர்கள் எம்,சி சம்பத் மற்றும் பென்ஜமின் ஆகியோரின் கவனத்திற்கும் எடுத்து சென்றேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

கஜா புயலால் பாதித்த சிறு, குறு தொழில்களுக்கு உதவுவ வேண்டும் என வலியுறுத்தி நாகையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக மாஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிழுன் அன்சாரி தொடங்கி வைத்தார். 2018 ல் வீசிய கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறு ,குறு தொழில்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி நாகை சிறு மற்றும் குறு தொழில் சங்கம் சார்பில் அதன் தலைவர் திரு.ராமச்சந்திரன் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம்  நடைப்பெற்றது. அதை தொடங்கி வைத்து மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட  சிறு, குறு தொழில்களுக்கு தமிழக அரசு உதவியது போல, கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட சிறு, குறு தொழில்களுக்கும் வழங்க வேண்டும். இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு , 35 % இழப்பீடு வழங்க கோப்புகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல்வர் நாகைக்கு வந்தப்போது, அவரிடம் நானும், இச்சங்கத்தினரும் நேரில் வலியுறுத்தினோம்.  மாண்புமிகு அமைச்சர்கள் எம்,சி சம்பத் மற்றும் பென்ஜமின் ஆகியோரின் கவனத்திற்கும் எடுத்து சென்றேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் தான் இந்த உண்ணாவித்தில் பங்கேற்கிறேன். நாகை என்பது ஒரு  வரலாற்று நகரம். முதல் நகராட்சி, முதல் மீட்டர் கேஜ் ரயில் தடம் என பல பெருமை உண்டு. 

மன்னர் அசோகர் கட்டிய மடம் இங்குள்ளது. ராஜேந்திர சோழன் இங்கிருந்துதான் கிடாரத்தை வெல்ல மலேஷியாவுக்கு கடற்படையுடன் புறப்பட்டான். வட இந்தியாவிலிருந்து வந்த பொளத்த துறவிகள் இங்கு தங்கிய பிறகுதான் இலங்கைக்கு சென்றார்கள். இங்கு சர்வதேச ஏற்றுமதி, இறக்குமதி துறைமுகம் இயங்கியது. இப்படிப்பட்ட நகருக்கு இன்று தொழில்கள் இல்லை. மீன்பிடி தொழிலும், விவசாயமும் மட்டுமே உள்ளது.அதுவும் அடிக்கடி நிகழும் பேரிடர்களில் பாதிக்கப்படுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உலகம் எங்கும் செல்கிறது. இங்கு விளையும் நெல் தென்னிந்தியாவெங்கும் செல்கிறது. ஆனால் தொழில்கள் இல்லாததால் இப்பகுதி மக்கள் வெளி நகர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள்.எனவேதான், நான் நாகை  துறைமுகத்தை மேம்படுத்தி தருமாறு சட்டமன்றத்தில் பேசினேன். முதல்வரிடம் வலியுறுத்தினேன்.

 

அது நிறைவேறினால் இங்கு பல வகை தொழில்கள் பெருகும். தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகள் பயன் பெறும். அது போல நாகைக்கும், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே பயணிகள் சிறு கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினேன். இதனால் வணிகம் மட்டுமின்றி ஆன்மீக சுற்றுலாவும்,மருத்துவ சுற்றுலாவும் பெருகும். ஆனால் மத்திய அரசு அந்த வாய்ப்பை காரைக்காலுக்கு கொடுக்கிறது. இப்படி நாகை பல வகையிலும் பாதிக்கப்படுகிறது. எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட சிறு, குறு தொழில்களுக்கு உரிய இழப்பீடை தந்து தமிழக அரசு இவர்களுக்கு உதவ வேண்டும். தொழில் வளம் இப்பகுதிக்கு தேவைப்படுகிறது.எனவே இது குறித்து நான் மீண்டும் முதல்வரிடம் மனு அளித்து பேசுவேன் என உறுதி கூறுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!