பகல் கனவு வேண்டாம்.. எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது.. அடிச்சு தூக்கும் முதல்வர்..!

Published : Apr 02, 2021, 11:43 AM IST
பகல் கனவு வேண்டாம்.. எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது.. அடிச்சு தூக்கும் முதல்வர்..!

சுருக்கம்

திமுகவை சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதை மறைப்பதற்கு தங்கள் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திமுகவை சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதை மறைப்பதற்கு தங்கள் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முதல்வர் பேசுகையில்;- 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்.கோவை மாவட்டமே இங்கு குவிந்துள்ளதை பாருங்கள் ஸ்டாலின் அவர்களே, வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி அதிமுக என கூறினார். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், நிச்சயமாக வெல்ல முடியாது. 

அதிமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி. பிரதமர் மோடி இந்தியா வல்லரசு நாடாக மாற்ற உழைத்து கொண்டியிருக்கிறார். ஆகையால், வலிமையான கூட்டணி அமைத்து, இந்த தேசம் வலிமை பெற வேண்டும், தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட வெற்றி கூட்டணி என குறிப்பிட்டுள்ளார்.

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தற்போது கோவையில் குவிந்துள்ள மக்களை பார்த்தால், சென்ற முறை ஒரு தொகுதியை இழந்தோம், இந்த முறை 100% வெற்றி பெறுவோம் என்பதை வந்துள்ள மக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். திமுகவை சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதை மறைப்பதற்கு, தங்கள் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
TVK CM VIJAY: தமிழக அரசியலில் புதிய திருப்பம்! தேர்தல் களத்தில் சவுக்கு சங்கர்? திரிஷாவுடன் சேர்த்து 5 பேரை டிக் அடித்த தளபதி?!