
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் அவரை தங்களின் தொகுதிக்கு வந்து அதிமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பரப்புரை செய்யுமாறு திமுக வேட்பாளர்கள் ட்விட்டரில் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கோவை தொண்டாமூத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக வந்து பரப்புரை செய்யுமாறு அழைப்புவிடுத்தார்.
இந்த நிலையில் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் இ கருணாநிதி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் செங்குட்டுவன், பர்கூர் தொகுதியில் போட்டியிடும் மதியழகன், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், திருச்சியில் போட்டியிடும் இனிக்கோ இருதயராஜ், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் ஆர்.காந்தி மேலும் பல்வேறு திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து தங்களின் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். அதில், தாங்கள் எங்கள் தொகுயில் பிரச்சாரம் செய்தால் தங்களின் வெற்றிக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் முகாமிட்டு பாஜக, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையிர் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அலை இருப்பதாகவும் அதனால் பல இடங்களில் மோடியின் பெயர் அழிக்கப்பட்டு பாஜகவின் கொடுகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் மோடியை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அழைத்து வருவது பாஜக தொண்டர்களை கோபமூட்டுவதாக மாறியுள்ளது.