நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை கமிட்டி போட்டாலும் விடமாட்டேன்.. பகிரங்கமாக எச்சரித்த அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 9:24 AM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்த அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பதன் காரணம் என்ன என்றும் கேள்வியையும் எழுப்பினார். 

மேகதாது அணை விவகாரத்தில் அணை கட்டக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்பேன் என்றும் அவர் கூறினார் தமிழக பாஜக மாநிலத்தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மாலை பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் 4 எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். அதற்கு அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நான் கட்சியை கொண்டு செல்வேன் என்றார். 

திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்த அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பதன் காரணம் என்ன என்றும் கேள்வியையும் எழுப்பினார். எந்த கமிட்டி போட்டு இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கு வரை இன்று நீட் தேர்வின் நன்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றார். 96 கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு  ஆர்டர் செய்திருக்கிறார்கள் ஆனால் மத்திய அரசு தடுப்பூசி தரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் இந்திய ஊடகங்களின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது பாஜக என்று கூறிய அவர், ஐ.டி. சட்டம் குறித்து நான் பேசியதை ஊடகம் குறித்து பேசியதாக தவறாக சித்தரிக்கிறார்கள் என தெரிவித்தார்.

37 வயதில் தலைவர் பதவி கிடைத்துள்ளது, இதை நான் சேவகனாக பார்கிறேன் என்றும், மூத்த தலைவர்களை அனுசரித்து செயல்படுவேன் என்றும் கூறிய அவர், பாஜக ஒரு குடும்பம் ஒரு தலைவர் என மற்ற கட்சியை போல் கிடையாது  என்றும், கடைக்கோடியில் இருக்கும் ஒரு மனிதனுக்கும்  பாஜக கொடுக்கும் அங்கீகாரம்தான் உண்மையான சமூகநீதி என அவர் கூறினார். மேகதாது அணை விவகாரத்தில் அணை கட்டக்கூடாது என்பதே பாஜக வின் நிலைப்பாடு என்றும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்பேன் என்றும் அவர் கூறினார். 
 

click me!