தினகரன் என்ன சட்ட வல்லுனரா? ஓபிஎஸ் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கு தான்.. ஜெயக்குமார்.!

By vinoth kumar  |  First Published Feb 24, 2023, 2:48 PM IST

 ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்குத் தான். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக இருந்தாலும், அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை. இது குறித்து மக்களவைக்கு கட்சி சார்பில் தெரிவிப்போம். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம். 


திமுகவின் B டீமாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி அதிமுகவில் சேர்க்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக சட்ட விதிகளின்படி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதிமுகவை வலிமைமிக்க எழுச்சிமிக்க இயக்கமாக எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துள்ளார். திமுகவின் B டீமாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி அதிமுகவில் சேர்க்க முடியும். திமுகவுடன் கைகோர்த்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என நினைத்தவர்கள் அடையாளம் இல்லாமல் போய்விட்டனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இது காவிக் கட்சியின் சித்து விளையாட்டு.. பாஜகவை கிழித்து தொங்க விட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்..!

பொதுச்செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்குத் தான். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யாக இருந்தாலும், அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை. இது குறித்து மக்களவைக்கு கட்சி சார்பில் தெரிவிப்போம். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம். 

இதையும் படிங்க;-  கொஞ்சம் நேரம் கூட நிலைக்காத எடப்பாடி பழனிசாமியின் சந்தோஷம்.. உயர்நீதிமன்றத்தில் வந்த நோட்டீசால் அதிர்ச்சி.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவிற்கு சரியான பதிலடி அதிமுக கூட்டணி வழங்கும். கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு அதிமுக வேட்பாளர் தென்னரசு நிச்சயம் வெற்றி பெறுவார். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு நகல் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கறிஞர் குழுவினருடன் தேர்தல் ஆணையத்தில் இன்று வழங்க உள்ளனர். உச்ச நீதிமன்றம் பலவீனப்படுத்தும் என டிடிவி தினகரன் சொல்லியுள்ள கருத்துக்கு அவர் என்ன சட்ட வல்லுனரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க;-  அதிமுக அழிவுக்கு இபிஎஸ்.யின் ஆணவம், அகங்காரமும் தான் காரணம்.. சும்மா இறங்கி அடித்த டிடிவி. தினகரன்..!

click me!