சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்திப் பாருங்க !! அப்புறம் தெரியும் இந்த தமிழர்கள் யார் என்று? பொங்கி எழும் கட்சிகள்…

First Published Apr 5, 2018, 6:20 AM IST
Highlights
No IPL in chennai because of cauvery issue political parties warning


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை ஏமாற்றி வரும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் நடைபெறவுள்ள 7 ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வரும் 7 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. 10 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இந்த சீசனில் 7 போட்டிகள் சென்னையில் நடைபெறவிள்ளன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என  தமிழக அரசியல் கட்சிகள் சவால் விட்டுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன், எங்கள் பிள்ளைகள் போட்டிகளை நடத் விட மாட்டார்கள் என தெரிவித்தார், மைதானத்துக்குள் சென்று அங்கிருந்து வெளியேறமாட்டோம் என எச்சரித்தார்.

வரும் 10 ஆம் தேதி எப்படி கிரிக்கெட் போட்டிகள் நடத்துகிறார்கள் என பார்ப்போம் என நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவிரிப் பிரச்சனையில் ஒரு தீர்வு ஏற்படாமல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என விவசாய சங்கங்களும் எச்சரித்துள்ளன.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, காவிரி விவகாரத்தில் பா.ஜனதா தவிர எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் ஆதரவு தருவது என எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.

வருகிற 10-ந் தேதி சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் வாடி வதங்கும் சூழ்நிலையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு மானக்கேடு என்று கருதுகிறோம்.

எனவே, போட்டியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால், எங்கள் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களையும் சிறை பிடிப்போம் என எச்சரித்தார்..

click me!