
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என தெனவெட்டாக பேசும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெய்வேலியில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தை உடனே நிறுத்த வேண்டம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்துக்கு காவிரியில் இருந்து இம்மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் எங்களுக்கே தண்ணீர் இல்லை, நாங்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர மடீயும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெனாவெட்டாக தெரிவித்தார்.
இந்நிலையில், 'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு' சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தண்ணீர் திறக்க முடியாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு தமிழர்கள் அனைவரும் இணைந்து பாடம் புகட்ட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.