எதிர்க்கட்சிகள் மாற்றம் கொண்டு வர விடமாட்டேங்கிறாங்க !! மோடி ஆவேசம் !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 8:08 PM IST
Highlights

மாற்றங்கள் கொண்டு வந்தால் எதிர்ப்பதாக டெல்லியில் நடைபெற்ற அசோசெம் கருத்தரங்கில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

இந்தியாவின் வர்த்தக சங்கங்களில் ஒன்றான அசோசெம் அமைப்பின் நூற்றாண்டு விழா தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் புதிய இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விரும்புகிறது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.அப்போது 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பொருளாதாரம் பேரழிவை நோக்கி கொண்டிருந்தது. எங்களது அரசு சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டு நிலை நிறுத்தி இருக்கிறோம்.

5 டிரில்லியன் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய 5 ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய பொருளாதார நிலையை முன்னேற்ற ஓய்வின்றி உழைத்து வருகிறோம்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்தியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், நவீனப்படுத்தவும் விரும்புகிறோம். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கருத்துக்களை கேட்கும் அரசை இந்தியா பெற்று இருக்கிறது.

வரி விதிப்பு முறையில் வெளிப்படைத்தன்மை, செயல் திறன் மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை தீர்ப்பதற்கும், தலைகீழான கட்டமைப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கிறது. எல்லா வணிக தோல்விகளும் மோசடிகளால் ஏற்படுவதில்லை.

தோல்விகளை குற்றமாக கருத முடியாது. மாற்றங்களை கொண்டு வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையை எதிர் கொண்டது. தற்போதைய மந்த நிலையில் இருந்து விடுபட்டு நாடு மிகவும் வலுவாக வெளியே வரும் என்று மோடி தெரிவித்தார்..

click me!