இடைத்தேர்தல் வரும்….ஆனால் வராது !! தேர்தலை தள்ளி வைக்க டெல்லிக்கு ரகசிய தூதுவிட்ட எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Nov 8, 2018, 8:43 PM IST
Highlights

மழையை காரணம் காட்டி திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைத்த ஆளும் அதிமுக அரசு தற்போது ஏதாவது ஒரு காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் 18 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க டெல்லிக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரகசிய தூதுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு விரைவில் 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு வேறுவிதமான கருத்துக்கள் வெளிப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இல்லை அதிமுகவின் வலிமையை உலகிற்கு தெரியப்படுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என இன்னொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்கு செல்வார்கள் என எடப்பாடி தரப்பில் எதிர்பார்த்தனர். அதன் மூலம் இன்னும் கொஞ்ச நாள் ஆட்சிக் கட்டிலில் தொடரலாம் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்கள் இடைத் தேர்தலை சந்திப்போம் என தில்லாக அறிவித்துவிட்டனர். அதே நேரத்தில் தேர்தல் குறித்து உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டில், 20 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றும், 6 முதல் 8 தொகுதிவரை அமமுக கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை 2 முதல் 4 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் அதுகூட இழுபறியில் தான் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ந்துபோன எடப்பாடி தரப்பு , ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள  8 எம்எல்ஏக்கள் வேண்டியுள்ள நிலையில் இதை எப்படி சமாளிப்பது?  என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இடைத் தேர்தல் நடந்தால் ஆட்சியை இழக்க வேண்டிவரும் என்றும், கொஞ்சநாள் தள்ளிப் போட்டால் ஆட்சியையும், சிறிது நாட்கள் தொடரலாம் என்றும் எடப்பாடி தரப்பு நினைக்கிறது. இதனால்தான் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வருமா? வராதா? என அரசியல் நோக்கர்கள் கருதத் தொடங்கிவிட்டனர் .

அதிமுக எம்எல்ஏக்களே  இடைத் தேர்தல் இப்போது வருவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருமபவில்லை என்ற தெரிவிகின்றனர். இந்நிலையில் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத் தேர்தலையும் நடத்துவதுதான் நல்லது என்று டெல்லிக்கு தூதுவிட்டு வருகின்றனர் தமிழக ஆளும் தரப்பிப்னர். அது தான் இடைத் தேர்தல் வருமா ? வராதா ? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

click me!