கருப்புப் பட்டையெல்லாம் அணிய முடியாது….  சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு…

First Published Apr 10, 2018, 8:24 AM IST
Highlights
No black shirt in the time of game IPL CSK told


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என் அந்த அணியின் அணி தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சீசன் 11  கடந்த சனிக் கிழமை மும்பையில் தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணி  அபாரமாக விளையாடி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் சென்னை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது,

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாயர்களிடையே பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், சென்னையில் போட்டிகளை நடத்த விடமாட்டோம் என தெரிவித்துள்ளார். இதே போல் சீமான் உள்ளிட்டோரும் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தும் ஐபிஎல் க்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முடிந்தால் சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தார்.

ஆனால், சென்னையில் டி-20 போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் குறைந்தபட்சமாக தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக கையில் கருப்புப்பட்டை அணிய வேண்டும் என்ற கோரிக்கை பற்றி விளக்கம் அளித்த அணி தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்,’சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் யாரும் கருப்புப்பட்டை அணிந்து விளையாடமாட்டார்கள்.’ என திட்டவட்டமாக தெரிவித்தார். 

click me!