பாஜகவோட கூட்டணி வேண்டவே வேண்டாம் !! பொங்கித் தீர்த்த பொன்னையன் !!

By Selvanayagam PFirst Published Jan 31, 2019, 9:52 PM IST
Highlights

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும்  5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த பாஜக இப்போது கிடையாது,  இந்த 5 வருடங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு நல்லது செய்ததைவிட கெடுதல் செய்ததுதான் அதிகம் என்றும் . அப்படி இருக்கும்போது, அவர்களுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதில் மதிமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எதிர்த்து அதிமுகவிலும் ஒரு மெகா கூட்டணி உருவாக உள்ளது. இதற்கான திரைமறைவு வேலைகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது. இதனை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முன்னிறுத்தி ஒருங்கிணைத்து வருகிறார். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த கூட்டணி குறித்த அறிவிப்புகள் விரைவில்  வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது, கடந்த சில நாட்களாகவே துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். இதே போல் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக எம்.பி.க்கள்  உள்ளிட்ட பலரும் பாஜக கூட்டணி வேண்டாம் என கூறி வருகினற்னர்,


இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமர் , அது தம்பிதுரையில் சொந்த கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

அப்போது பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். 5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த பாஜக இப்போது கிடையாது. இந்த 5 வருடங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு நல்லது செய்ததைவிட கெடுதல் செய்ததுதான் அதிகம். அப்படி இருக்கும்போது, அவர்களுடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது. அப்படியே கூட்டணிவைத்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே பாஜகவுடன் கூட்டணி சரிவராது என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

click me!