பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை... எம்.பி. பாலசுப்பிரமணியன் கருத்தால் அலண்டு போன எல்.முருகன்...

By vinoth kumarFirst Published Sep 21, 2020, 6:44 PM IST
Highlights

இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டாம். சட்டப்பேரவை தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பார்க்கலாம் என்று அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டாம். சட்டப்பேரவை தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பார்க்கலாம் என்று அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் அதிமுக ஆதரவுடன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஆனால், மாநிலங்களவையில் அதிமுக எம்பி எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுகவின் இந்த இரட்டை நிலைபாட்டிற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி. எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன்;- ஓ.பி. ரவீந்திரநாத் புதிய உறுப்பினர் என்பதால் வேளாண் மசோதாக்களை ஆதரித்தார். ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்ததால் நானும் ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காத போது விமர்சிக்க வேண்டும். தங்கள் கருத்துகளை கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எனது கருத்துகளை தெரிவித்தேன். மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லையே? என்று விளக்கமளித்துள்ளார். 

மேலும், பேசிய அவர் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. பாஜகவின் திட்டங்களால் தமிழகத்தல் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது. இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டாம். சட்டப்பேரவை தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி தொடர்வதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்து இருந்த நிலையில், அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கருத்து தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

click me!