இந்தியாவில் கொரோனா பரவியதற்கு முக்கிய காரணம் தப்லீக் ஜமாத்... மத்திய அரசு விளக்கம்..!

Published : Sep 21, 2020, 06:13 PM IST
இந்தியாவில் கொரோனா பரவியதற்கு முக்கிய காரணம் தப்லீக் ஜமாத்... மத்திய அரசு விளக்கம்..!

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும்பாலனவர்களுக்கு பரவக்காரணம் தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியது முக்கியமாக பார்க்கப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும்பாலனவர்களுக்கு பரவக்காரணம் தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியது முக்கியமாக பார்க்கப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத்ன  தொடர்பாக சிவசேனா எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில்,  ‘’கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர். 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.

டெல்லி அரசு கொரோனா விதிகளை முழுமையாக அமல்படுத்தி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒரு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார். 
 
PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!