பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காது ! அதிமுக எம்.பி. தான் இப்படிச் சொல்லியிருக்காரு !! ஏன் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jul 5, 2019, 5:40 PM IST
Highlights

ஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோல் டீசலை பயன்படுத்த மாட்டார்கள் அதனால் பெட்ரோல் விலை உயர்வு என்பது அவர்களை பாதிக்காது என்று அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் பட்ஜெட்டை விமர்சனம் செய்து பேசும்போது குறிப்பிட்டார்.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின் 2109 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல புதிய அறிவிப்புகள், திட்டங்களை போன்றவற்றை அவர் அறிவித்தார். 

பெட்ரோல், டீசல் மற்றும் இறக்குமதி தங்கத்தின் மீதான வரியை உயர்த்துவதாகவும் அறிவித்தார். ஏற்கனவே  பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் வரி உயர்த்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த  அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், “இது வளர்ச்சிக்கான பட்ஜெட் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு போடப்பட்ட ஒரு சிறப்பான பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

.அனைவருக்கும் வீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது சில்லரை வியாபாரிகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த வரவேற்கத்தக்கது. என குறிப்பிட்டார்.

குறிப்பாக தமிழர்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டை கொண்டாட வேண்டும். ஏனென்றால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது புறநானூறு  பாடலை சுட்டிக்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கது  என்றார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் யாரும் தினமும் பெட்ரோல் டீசலை பயன்படுத்த மாட்டார்கள். அதனால் பெட்ரோல் உயர்வு என்பது அவர்களை பாதிக்காது என்றும்  நவநீதிகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்..

click me!