ஒப்பந்த தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி...!!! - ஸ்டாலின் கண்டனம்...

Asianet News Tamil  
Published : Jul 31, 2017, 08:04 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
ஒப்பந்த தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி...!!! - ஸ்டாலின் கண்டனம்...

சுருக்கம்

NLC was involved in road traffic struggle in Vadlam. DMK activist Stalin condemned the police beating the contract workers.

வடலூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள்மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கெனவே செய்து வந்த மாதம் 26 நாட்கள் வேலையை 19 நாட்களாக குறைத்துள்ளது என்.எல்.சி. நிர்வாகம்.

இதைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 12 ஆம் தேதி வேலை நிருத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்றுடன் 20 வது நாளை எட்டியதால் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தை மனைவியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை களைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவிக்கவே போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்நிலையில் ஜனநாயகமுறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை எடப்பாடியின் ஏவல் துறையாக செயல்படுவதாகவும், முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!