நிவர் புயல் தமிழகத்தை முழுவதுமாக கடந்துள்ளது..!பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயக்குமார் பேட்டி..!

By T BalamurukanFirst Published Nov 26, 2020, 8:00 AM IST
Highlights

நிவர் புயல் தமிழகத்தை முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 

 நிவர் புயல் தமிழகத்தை முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது பேசியவர்... "வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது.

மேலும் சென்னையில் மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது. அதன்பிறகு புயலின் நகர்வில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.இதுகுறித்து தகவல் தெரிவித்த வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், புயலின் கண் பகுதியை கணிக்க முடியாத காரணத்தினால் அதன் தற்போதைய வேகத்தை கணிக்க முடியவில்லை என்று இரவு 7 மணியளவில் தெரிவித்தனர். அதன்பின்னர், 7.45 மணியில் இருந்து புயலின் நகர்வு வேகம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இரவு 8.30 மணி நிலவரப்படி கடலூருக்கு கிழக்கே தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே, தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இரவு 10.45 மணிக்கு அதி தீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது. அதி தீவிர புயலாக கரையைக் கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையக் கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது என அவர் தெரிவித்துள்ளார்

click me!