வரலாற்று சாதனை படைத்த நிதிஷ்குமார்... 4வது முறையாக முதல்வராக பதவியேற்றார்..!

By vinoth kumarFirst Published Nov 16, 2020, 7:04 PM IST
Highlights

பீகாரில் 7வது முறையாகவும், தொடர்ந்து 4வது முறையாகவும் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சர்களும், 14 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

பீகாரில் 7வது முறையாகவும், தொடர்ந்து 4வது முறையாகவும் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சர்களும், 14 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த முதல்வர் மற்றும் பதவியேற்பு நாள் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலுக்கு  முன்பாகவே கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்பார் என பாஜக தலைமை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

அப்படி இருந்த போதிலும் கூட்டணி விதிகளின் கீழ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி , முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன், மாநில ஆளுநர் பாஹு சவுகானை சந்தித்து, ஆட்சி அமைக்க, அவர் உரிமை கோரினார். 

அதன்படி, இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் 7வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். இதில் அவர் தொடர்ச்சியாக 4வது முறையாக முதல்வராக பதவியேற்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர்களாக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் பதவியேற்றனர். அத்துடன் 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாட்னாவில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

click me!