நீங்க சொல்ற வேட்பாளருக்கு உங்க கணவர் ஓட்டுப் போடலையா ! மனைவிகளே இதைச் செய்யுங்க ! நிதிஷ்குமார் அட்வைஸ் !!

Published : Apr 26, 2019, 10:03 AM IST
நீங்க சொல்ற வேட்பாளருக்கு உங்க கணவர் ஓட்டுப் போடலையா ! மனைவிகளே இதைச் செய்யுங்க ! நிதிஷ்குமார் அட்வைஸ் !!

சுருக்கம்

நீங்கள் கைகாட்டும் வேட்பாளருக்கு உங்கள் கணவர் ஓட்டு போடவில்லை என்றால் mtU;fF சோறு போடாதீங்க என பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பெண்களுக்கு கலக்கல் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று  பீகார் மாநிலத்தின் மதுபானி என்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அசோக் யாதவ் என்பவருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். 

அப்போது பெண்கள் எப்போதும் புத்திசாலிகள். அவர்கள் சரியான வேட்பாளரை தேர்வு செய்வார்கள். நீங்கள் தேர்வு செய்த வேட்பாளருக்கு உங்கள் கணவரையும் வாக்களிக்க வற்புறுத்துங்கள் என தெரிவித்தார்.

அப்படியும் அவர் கேட்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் அவருக்கு சோறு போடாமல் பட்டினி போடுங்கள்' என்று பேசினார். வீட்டை தங்கள் கட்டுப்பாட்டில் பெண்கள் வைத்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் அந்த வீடு நல்ல நிலையை அடையும் என்றும் அவர் கூறினார்

அவருடைய இந்த பேச்சு கூட்டத்தில் இருந்த பெண்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..பெண்கள் குறித்து இவ்வளவு பேசும் நிதிஷ்குமார் தனது கட்சியின் சார்பில் ஒரே ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே வரும் மக்களவை தேர்தலில் நிறுத்தியுள்ளார் என்று சமூக வலைத்தள நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!