ஐக்கிய ஜனதாதளத்திற்கு பாஜக கல்தா கொடுத்தது... மோடிக்கு நிதிஷ்குமார் கல்தா கொடுத்தார்..!

By Asianet TamilFirst Published Jun 2, 2019, 8:58 PM IST
Highlights

 பீகாரில் அமைச்சரவையை முதல்வர் நிதிஷ்குமார் இன்று விரிவாக்கம் செய்தார். ஐக்கிய ஜனதாதளத்தைச்சேர்ந்த 5 புதிய முகங்கள் உள்பட 8 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். ஆனால், கூட்டணி அமைச்சரவையில் உள்ள பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கும் விரிவாக்கத்தில் நிதிஷ்குமார் அமைச்சர் பதவியை வழங்கவில்லை. 

மத்தியில் உரிய அமைச்சர் பதவி தராத பாஜகவுக்கு மாநிலத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் தராமல் பதிலடி கொடுத்திருக்கிறார் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவருமான நிதிஷ்குமார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் உள்ள 40 இடங்களில் 39 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்றது. மத்தியில் 303 இடங்களைப் பிடித்த பாஜக, அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் கொடுத்தது. ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்க மோடி முன்வந்தார். ஆனால், 2 அமைச்சர் பதவி எதிர்பார்த்த நிதிஷ்குமார், ஏமாற்றமடைந்தார். இதனால், அமைச்சரவையில் இடம் பெறாமல் பீகார் திரும்பினார் நிதிஷ்குமார்.
இந்நிலையில் பீகாரில் அமைச்சரவையை முதல்வர் நிதிஷ்குமார் இன்று விரிவாக்கம் செய்தார். ஐக்கிய ஜனதாதளத்தைச்சேர்ந்த 5 புதிய முகங்கள் உள்பட 8 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். ஆனால், கூட்டணி அமைச்சரவையில் உள்ள பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கும் விரிவாக்கத்தில் நிதிஷ்குமார் அமைச்சர் பதவியை வழங்கவில்லை. மத்திய அமைச்சரவையில் தங்கள் கட்சிக்கு உரிய அமைச்சர் பதவியைத் தராத பாஜகவுக்கு, அவர்கள் பாணியில் நிதிஷ்குமார் பதிலடி கொடுத்திருப்பதாகப் பரபரப்பு எழுந்துள்ளது.


பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தின் பராஸ்பர நடவடிக்கையால் இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மத்திய அமைச்சரவையில் இணைய மாட்டோம் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் திட்டவட்டமாகக் கூறிவருகிறார்கள். ஆனால், இரு கட்சிகளுக்கும் பிளவு இல்லை என பீகார் பாஜக தலைவரும் துணை முதல்வருமான சுஷில்குமார் தெரிவித்துள்ளார். “அடுத்து நடக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

click me!