இந்தி திணிப்பு... தமிழில் ட்விட் போட்டு அசத்திய மத்திய அமைச்சர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jun 2, 2019, 5:49 PM IST
Highlights

’எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கள் தெளிவுபடுத்தி உள்ளார். 

’எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கள் தெளிவுபடுத்தி உள்ளார். 


மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜக தமிழகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்து வருவதாக நேற்று முதல் அரசியல் கட்சி தலைவர்களும், சமூக வலைத்தள போராளிகளும் இணையதளத்தில் போராடி, இந்தி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்ட் ஆக்கினர்.

மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை./1

— Dr. S. Jaishankar (@DrSJaishankar)

 

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கருத்துத் தெரிவித்துள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை'' என தெளிவுபடுத்தியுள்ளார். 

மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “ முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்ய அரசு முன்னின்று ஆதரிக்கும்.

— Nirmala Sitharaman (@nsitharaman)

 

மத்திய அமைச்சவையில் இடம்பிடித்துள்ள இந்த ஜெய்சங்கர் தமிழர். மற்றொரு தமிழரான நிர்மலா சீதாராமனும், தமிழில் ட்விட் போட்டிருந்தார். அதில், ’’மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்’’ எனக் கருத்து தெரிவித்து இருந்தார். 

click me!