
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவங்கர் கல்லூரி துணை பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகள் 4 பேரை, பாலியல் வலை விரித்த புகாரில் கைது செய்யப்பட்டு விசாரக்கப்பட்டு வருகிறார். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. நிர்மலா தேவியின் செக்ஸ் வேட்டை பற்றியும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா, ஆகியோரின் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் இருந்து விடுபடுவதாக கூறியுள்ளார். இது குறித்து வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக கூறினார். எனது முடிவுக்கு யாருடைய நிர்பந்தமும் கிடையாது என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.