
கர்நாடகாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, பெங்களூருவில் உள்ள வீட்டில்
குடியேறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மிக பெரும் கட்சிகளாக காங்கிரசும
பாஜகவும் உள்ளன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இவ்விரு கட்சிகளும் தீவிரமாக தேர்தேல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல், இந்திய அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியை
தக்கவைத்துக்கொள்ள மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முயன்று
வருகிறது.
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாகத்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பாஜக அரசு
தயக்கம் காட்டி வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், காங்கிரசை வீழ்த்தி
ஆட்சி கட்டிலுக்கு வர பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் தேதி நெருங்கும் சமயத்தில், கர்நாடக தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கடந்த இரண்டு
மாதங்களுக்கு முன்பிருந்தே, கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பாஜகாவுக்கு ஆதரவாக வாக்கு
சேகரித்து வருகிறார்.
கர்நாடகாவில், தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, அங்கு ஒரு வீடு எடுத்து குறியேறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் முடியும்
வரை அவர், இந்த வீட்டில்தான் தங்க இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் சாளுக்கிய சதுக்கம் அருகே உள்ள ஃபீல்ட் அவுட் என்ற
இடத்தில் 6 அறைகளுடன் கூடிய இரண்டு அடுக்கு பங்களா வாடகைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த வீட்டில் பூஜைகள் நடத்தப்பட்டு
அமித்ஷா குடியேறியுள்ளார்.