அடுத்து தென்காசி மாவட்டம் !! எடப்பாடி அதிரடி அறிவிப்பு !!

Published : Jul 06, 2019, 10:06 PM IST
அடுத்து தென்காசி மாவட்டம் !! எடப்பாடி அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

தென்காசி மக்களின் கோரிக்கையை ஏற்று  திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை  உருவாக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அமமுகவில இருந்து அண்ணைமயில் விலகிய முன்னாள் சட்டத் துறை அமைச்சர் இசக்கி சுப்பையா  அதிமுகவில் இணையும்  விழா தென்காசியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , இந்த ஆட்சி கலைந்து விடும் என சிலர் கனவு கண்டனர் என குறிப்பிட்டார்.

ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது.  நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக வெற்றி பெற்றது.  

நாங்குநேரி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தர வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும், இரவு - பகல் பாராமல் வெற்றி பெற பாடுபட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தென்காசி மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லையை இரண்டாக பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலனை செய்யப்படும். 

ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு, குடிமராமத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி ஏழை குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு