இன்னும் ஒரு வாரம்தான் தினகரன் டிரைவர் கூட எங்க பக்கம் வந்திடுவாரு … சிரிப்பாய் சிரிக்கும் ராஜேந்திர பாலாஜி !!

Published : Jul 06, 2019, 09:21 PM IST
இன்னும் ஒரு வாரம்தான் தினகரன் டிரைவர் கூட எங்க பக்கம் வந்திடுவாரு … சிரிப்பாய் சிரிக்கும் ராஜேந்திர  பாலாஜி !!

சுருக்கம்

அமமுகவில் இருந்து  ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் அடுத்த வாரத்தில் தினகரனின் கார் டிரைவர் கூட அதிமுகவில் இணைந்துவிடுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாக உடைந்த பின்னர் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனற் கட்சியைத் தொடங்கினார். அந்தக்கட்சி அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கசியில் இருந்து ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். தேர்தலுக்கு  முன்பே கரூர் செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகினார். இவரைத் தொடர்ந்து பாப்புலர் முத்தையா, தங்கதமிழ் செல்வன், இசக்கி சுப்பையா போன்றோர் விலகினர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பின்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதிமுக பொதுச் செயலார் வைகோவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

மிகச் சிறந்த தமிழ் போராளியான அவர் தமிழ் உணர்வுகளையே பிரதிபலித்தார் என தெரிவித்தார்.

திமுகவில் பல  ஆண்டுகளாக  உழைத்தவர்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்காத நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஈசியாக கிடைத்துள்ளது என கிண்டல் செய்தார்.

தினகரனின் அமமுகவில் இருந்து அனைத்து தரப்பினரும் விலகி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரம் தான் அவரது கார் டிரைவர்கூட அவரிடம் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து விடுவார். 

கடைசியில் அமமுகவில் டி.டி.வி.தினகரன் மட்டுமே இருப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செமையாக கலாய்த்தார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு