செந்தில் பாலாஜி கைதுக்கு முதல்வர் எதற்கு பதறுகிறார்? அடுத்த குறி ஸ்டாலினுக்கா? ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை

By vinoth kumar  |  First Published Jun 16, 2023, 7:52 AM IST

தனது மருமகனுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள ஒருவரை முதல்வரின் மருமகன் சென்று சந்தித்துள்ளார்.


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை முதல்வரின் குடும்பமே பாதுகாத்து வருகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

சிவகங்கையில் நடைபெற உள்ள பாஜக 9-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்வதற்காக மதுரை வந்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசுகிறார். கனிமொழி கைதுக்கு கூட ஸ்டாலின் இந்த அளவுக்கு கோபப்படவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் அவரின் பதவிக்கு உகந்ததாக இல்லை. இதன்மூலம் திமுகவின் கருவூலம் செந்தில் பாலாஜி என்பது நிரூபணமாகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சகோதரி கனிமொழி கைதுக்கு துடிக்காத முதல்வர் ஸ்டாலின்.. செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவது ஏன்? தமாகா கேள்வி..!

தனது மருமகனுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள ஒருவரை முதல்வரின் மருமகன் சென்று சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார். நாங்கள் எதற்கும் தயாராக தான் உள்ளோம். பாஜக தொண்டர் மீது கை வைத்து பாருங்கள். நிலைமை கை மீறினால் கோட்டைக்கு வருவோம். நீங்கள் கொடுத்தால் திருப்பி கொடுப்போம். நாங்கள் பழைய பாஜக அல்ல. ஊழல் செய்யும் அமைச்சர் மீது கோபம் காட்டாமல் பாஜக தொண்டர்கள் மீது கோபத்தை காட்டுவது என்ன நியாயம்?

இதையும் படிங்க;-  அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி! திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா செந்தில் பாலாஜி? பாஜக

டி.ஆர்.பாலு என் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் உரிய ஆவணத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். மனித உரிமை ஆணைய தலைவரை கட்சி தலைவராக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் எதிர்கட்சிகள் இணைந்தால் பாஜகவுக்கு லாபம் தான். எனவே எதிர்கட்சிகள் இணைவை பார்த்து பாஜக பயப்படவில்லை. சென்னை மெட்ரோவில் 2009-2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.200கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க;-   தமிழக அரசை மிரட்டி பார்க்க நினைக்கிறீங்களா! உங்க பாச்சா இங்க பலிக்காது! பாஜகவை திருப்பி அடிக்கும் வேல்முருகன்

 இதுகுறித்து பாஜக ஏற்கனவே மத்திய புலனாய்வு பிரிவில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கினால், முதலமைச்சர் மீது கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும். அதற்கு அஞ்சியே, தமிழகத்தில் மத்திய புலனாய்வு பிரிவு, விசாரணை மேற்கொள்ளும் அனுமதியை முதலமைச்சர் ரத்து செய்துள்ளார். எல்லோரும் மோடியை சர்வாதிகாரி என கூறுகின்றனர். ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரி தான் பிரதமர் மோடி. தவறு செய்தவர்களை விடமாட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

click me!