எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திண்டுக்கல் சீனிவாசன்... கடுப்பில் ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Sep 30, 2020, 7:26 PM IST
Highlights

முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால், செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கராசாரம் விவாதம் நடைபெற்றது. ஆனால், இறுதி வரை முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவு எடுக்கவில்லை. இதனையடுத்து, முதல்வர் யார் என்ற அறிவிப்பிணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிடுவார் என்று கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். வேலை காரணமாக முதல்வர் நடத்திய கூட்டத்துக்கு ஓபிஎஸ் பங்கேற்க முடியவில்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி இல்லை. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

click me!