நியூஸ் 7 வைகுண்டராஜனுடன் மோதும் ஸ்டாலின்! செம கடுப்பில் கனிமொழி!

 
Published : Jul 26, 2018, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
நியூஸ் 7 வைகுண்டராஜனுடன் மோதும் ஸ்டாலின்! செம கடுப்பில் கனிமொழி!

சுருக்கம்

News7 Vaikundarajan cracks with Stalin Kanimozhi tension

திடீரென நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையால் அவரது தங்கையும் எம்.பியுமான கனிமொழி கடும் எரிச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டது நியூஸ் 7 தொலைக்காட்சி. மேலும் கருத்துக் கணிப்பில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பகிரங்கமாக நியூஸ் 7 அறிவித்தது. மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் இழுபறி என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் நியூஸ் 7 மட்டும் தி.மு.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டது. மேலும் தேர்தல் செலவுக்கும் வி.வி.மினரல்ஸ் குறிப்பிட்ட தொகையை அப்போதே தி.மு.க தரப்புக்கு கைமாற்றி விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட வைகுண்டராஜன் ஒரு காலத்தில் ஜெயா தொலைக்காட்சியின் மிக முக்கியமான பங்குதாரர். அந்த அளவிற்கு ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த வைகுண்டராஜன் திடீரென தி.மு.க.விற்கு ஆதரவாக காரணம் கனிமொழி. ஏனென்றால் கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். வைகுண்டராஜனும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கனிம மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று கனிமொழி கொடுத்த வாக்குறுதியே வைகுண்டராஜன் தி.மு.க.வை ஆதரிக்க ஒரு காரணமாக கூறப்பட்டது.

மேலும் வைகுண்டராஜன் தரப்பும் – கனிமொழி தரப்பும் தற்போது வரை நெருக்கமாகவே இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினுக்கு தான் கனிமொழி – வைகுண்டராஜன் நெருக்கம் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே வைகுண்டராஜனை தேச விரோதி என்கிற அளவில் குற்றஞ்சாட்டி ஒரு அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளியான பிறகு தான் கனிமொழிக்கே கூட தெரியுமாம். வைகுண்டராஜன் தரப்பில் இருந்து கனிமொழியை அழைத்து கேட்ட போது முதலில் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் டெல்லியில் இருந்து அண்ணா அறிவாலயத்தை தொடர்பு கொண்ட பிறகே வி.வி.மினரல்சுக்கு எதிரான ஸ்டாலின் அறிக்கை விவகாரம் கனிமொழிக்கு தெரியவந்துள்ளது. 

நம்முடன் நல்ல அன்டர்ஸ்டேன்டிங்கில் இருக்கும் ஒருவரை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று தனக்கு நெருக்கமான தி.மு.க. மூத்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிமொழி கேட்டு இருக்கிறார். மேலும் தேர்தல் நேரத்தில் நமக்கு அனுசரணையாக இருக்கும் வைகுண்டராஜனை பகைத்துக் கொள்வது தி.மு.க.விற்கு தான் இழப்பு என்றெல்லாம் பேசியுள்ளார் கனிமொழி. மேலும் என்ன தான் நாம் பொறுத்து பொறுத்து போனாலும் நமக்கான முக்கியத்துவத்தை தி.மு.கவில் குறைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்றும் கனிமொழி ஸ்டாலின் மீது தற்போது எரிச்சலில் இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகிறது.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!