டுவிட்டர்லே பிரஸ் மீட் நடத்துங்க மிஸ்டர் ராஜா !!  நோஸ்கட் கொடுத்த  பத்திரிக்கையாளர்கள்!!

 
Published : Apr 29, 2018, 08:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
டுவிட்டர்லே பிரஸ் மீட் நடத்துங்க மிஸ்டர் ராஜா !!  நோஸ்கட் கொடுத்த  பத்திரிக்கையாளர்கள்!!

சுருக்கம்

News reprter avoid h.raja for press meet

கன்னியாகுமரிக்கு வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பத்திரிக்கையாளர்களை சந்திக்க  அழைத்தபோது, நீங்க டுவிட்டர்லேயே பிரஸ் மீட் நடத்திக்கோங்க என புறக்கணித்து அவருக்கு நோஸ்கட் கொடுத்தனர்.

பாஜக தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுவருவதால் அவரையும், பத்திரிகையாளர்கள் பற்றி இழிவுக் கருத்துரைத்த எஸ்.வி.சேகரையும் புறக்கணிப்பது என்று  மாவட்ட அளவில் பத்திரிகையாளர்கள் பலர் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று  குமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் பாஜகவின் நகரத் தலைவர் முத்துராமன் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் போன் செய்திருக்கிறார்.

“சார்... ஹெச். ராஜா நாகர்கோவில் வந்திருக்கிறார். கட்சி ஆபீஸ்ல 12 மணிக்கு பிரஸ்ஸை மீட் பண்றாரு. வந்துடுங்க” என்று அழைத்திருக்கிறார்.  ஆனால் எந்த பத்திரிக்கையாரும் பிரஸ்மீட்டுக்கு ஆஜராகவில்லை.

சொல்லி வைத்ததுபோல் அனைத்து நிருபர்களும், “சார் அவரை ட்விட்டர்லயே பிரஸ்மீட் பண்ணச் சொல்லுங்க. அவரோட பிரஸ்மீட்டை புறக்கணிப்பதாக பிரஸ் கிளப்லயே தீர்மானம் போட்டாச்சு. சாரி நாங்க வர முடியாது” என்று சொல்லிவிட்டனர்.

இந்தத் தகவலை நகர தலைவர் முத்துராமன் தயங்கியபடியே ஹெச்.ராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அதையடுத்து ஹெச்.ராஜாவின் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசுவதும், தரக்குறைவாக  நடத்துவதும் எச்.ராசு, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு வாடிக்கையாகிவிட்டது என தெரிவித்த நிருபர்கள் இனி அவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!